சுரங்க நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Saturday, March 9th, 2019

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து நடந்த மீட்புப் பணிகளில் மேலும், 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடல்களை மீட்கும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது என தெரிவித்தனர்.

Related posts: