சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் குறித்த விசாரணை அறிக்கை வெளியாகிறது !

Wednesday, September 28th, 2016

மலேசிய பயணிகள் விமானம் ஒன்று, கடந்த 2014-ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை, நெதர்லாந்து அதிகாரிகள் வெளியிட உள்ளனர்.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த அந்த விமானம், தரையிலிருந்து விண்ணில் பாயும் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதில் சுமார் 300 பயணிகள் கொல்லப்பட்டனர். டச்சு அதிகாரிகள் தலைமையிலான கூட்டு விசாரணைப் படை, கிரிமினல் விசாரணக்கான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருந்தது. விமானத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் தாக்குதல் நடைபெற்ற இடம் ஆகிய விவரங்களை தெளிவாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டச்சு பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் விசாரணையில், அந்த விமானம் கிழக்கு உக்ரைனில், ரஷ்ய தயாரிப்பான புக் ஏவுகணையால் தாக்குதலுக்கு உள்ளானதாக முடிவு செய்தனர்.

_91404436_160105154008_malaysian_airlines_flight_mh17_640x360_deanmouhtaropoulosgettyimages_nocredit

 

Related posts: