சுட்டுக்கொல்லப்படும் காணொளி தொடா்பில் விசாரணை வேண்டும்!
Wednesday, July 26th, 2017
போராளிகளாக இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 பேரை லிபிய இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் தொடர்பில் கண்காணிக்கும் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
லிபிய இராணுவத்தினர் மேற்படி 20 பேரை முழங்காலில் நிற்கவைத்து அவர்களை பின்னாலிருந்து சுடுவது குறித்த காணொளி வெளியானதைத் தொடர்ந்தே குறித்த குழு நேற்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், குறித்த காணொளியில் தோன்றும் இராணுவ உடையணிந்தவர்கள் லிபிய தேசிய இராணுவத்தை சேர்ந்தவர்கள் அல்ல என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஆயினும், லிபிய தேசிய இராணுவத்தின் சிறப்பு படைகளின் தளபதி குறித்த காணொளியில் தோன்றுகின்றார் எனவும் அது குறித்து தீவிர அக்கறை செலுத்தப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவில் நிலநடுக்கம்!
மிகப் பெரிய சரக்கு கப்பலில் தீவிபத்து: 1,100 சொகுசு கார்கள் கருகியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!
எந்த நேரத்திலும் தயார் - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா!
|
|