சீரற்ற வானிலை – சீனாவில் 33 பேர் உயிரிழப்பு!

சீனாவின் தலைநகர், பீஜிங்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இதுவரை 18 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அலெப்போவில் 48 மணி நேர போர் நிறுத்தம்!
சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி!
ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் காஸாவில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழப்...
|
|