சீன வெளிவிவகார அமைச்சர் வட கொரியா பயணம்!

Tuesday, May 1st, 2018

வட மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை அடுத்து சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யி (Wang Yi)அடுத்த வாரம் வடகொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வடகொரியாவின் முக்கிய பொருளாதார பங்காளியாக சீனா இருந்த போதிலும், சீனாவின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு பின்னர் செல்வது குறிப்பிடத்தக்கது.   குறித்த விஜயம் தொடர்பில் தென் கொரியா ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் உரையாடியுள்ளது.

இதனிடையே வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை எதிர்வரும் சில வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: