சீன ரொகெட் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது!

Sunday, May 9th, 2021

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்ட ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலைத் தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சீனா . இதற்காக கடந்த மாதம் 29 ஆம் திகதி லொங் மார்ச்-5பி ரொக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்திய ரொக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ரொக்கெட் இழந்தது. எந்த நேரமும் அந்த ரொக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. 18 தொன் எடை கொண்ட ரொக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.

அதன்படி, ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலைத் தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

Related posts: