சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் இந்திய பிரதமர் மோடி!

Tuesday, June 25th, 2019

ஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து அமெரிக்க வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 28, 29- திகதிகளில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து தற்போது ஜி-20 மாநாட்டின் இடையே 3 நாடுகளின் தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச இருப்பது தற்போது நிலவும் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என சீன வெளியுறவுத்துறை துணை மந்திரி ஜிங் ஜுன் பீஜிங்கில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தன்னுடைய வர்த்தக கூட்டணி நாடுகளை நடத்தும் முறை உலக வர்த்தகம், முதலீடு, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே 3 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில், அமெரிக்காவின் ஒருசார்பு வர்த்தக கொள்கை, வர்த்தக ரீதியான நெருக்கடி மட்டுமின்றி, 3 நாடுகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது, இராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சர்வதேச நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: