சீன தொழிற்சாலையில் சார மேடை கவிழ்ந்து 40 பேர் பலி!

Friday, November 25th, 2016
கிழக்கு சீனாவில் ஒரு குளிர்விப்பு கோபுரத்தின் மீது கட்டப்பட்டிருந்த தற்காலிக சார மேடை கவிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேலான மக்கள் இறந்துள்ளனர்.

ஜியாங்ஷி மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் நடைபெற்ற இந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை தெரியாத நிலை உள்ளதாக சீன செய்தி முகமையான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

ஊழல், தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்பு தர குறைபாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு தரப்படும் அழுத்தம் ஆகிய பல கூட்டு காரணங்களால் பெரும் தொழிற்சாலை விபத்துக்கள் சீனாவில் நடப்பது வழக்கமானது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

_92632322_chinafengcheng9761116

Related posts: