சீன ஜனாதிபதி – இந்தியப் பிரதமர் சந்திப்பு!

Monday, June 10th, 2019

கிர்கிஸ்தான் நாட்டில் இடம்பெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், சீன ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் சந்திக்க உள்ளார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளின் தலைவர்களும், பல்வேறு நிகழ்ச்சிகளின் இடையே 04 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: