சீன ஜனாதிபதியை சந்தித்த வடகொரிய ஜனாதிபதி!

Thursday, March 29th, 2018

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இற்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் இற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது

கிம்மின் இந்த விஜயம் சீனா மற்றும் வட கொரியாவால் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், எனவே 2011ஆம் ஆண்டு அதிபராக கிம் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தில், அணு ஆயுதங்கள் பயன்பாடு தவிர்க்கப்படும் என கிம் உறுதி அளித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

“தென் கொரியா மற்றும் அமெரிக்கா, எங்களின் முயற்சிகளை நல் எண்ணத்துடன் பார்த்தால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் பிரச்சினை தீர்க்கப்படும்.” என கிம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

மேலும், வட கொரியாவுக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை ஷி ஜின்பிங் ஏற்றுக் கொண்டார் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: