சீன ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா தடை!

Wednesday, September 9th, 2020

தொழிலாளர்கள் பலவந்தப்படுத்தப்பட்டு தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து நிலையில் சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலிருந்து முக்கியமான ஏற்றுமதிகளை மேற்கொள்ள அமெரிக்கா தடை விதிக்கவுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள ஏற்றுமதித் தடைகளில், பருத்தி மற்றும் தக்காளி உற்பத்திகளும் அடங்குகின்றன. இவை இரண்டும் சீனாவின் பாரிய ஏற்றுமதி உற்பத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையாக உள்ள ஈகர் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக சீனா மீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையும் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: