சீன எதிர்ப்பு ஹொங்கொங் தேர்தலில் எதிரொலிப்பு!

ஹொங்கொங் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக சீன எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.
சீனாவுடன் ஹொங்கொங் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை நிர்ணயிக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திய இளம் தலைவர்களில் ஒருவரான நாதன் லா, தேர்தெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களில் ஒருவராவார்.
இருந்ததோதிலும், இந்த நகரின் மேல் சீனா காட்டுகின்ற கட்டுப்பாடுகளை ஆதரிப்போர் பெரும்பான்மையான இருக்கைகளை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை வர்த்தக மற்றும் சிறப்பு ஆவர்வலர் குழுக்கள் தேர்ந்தெடுக்க வழி செய்துள்ள பெருமை தேர்தல் அமைப்பு முறையை சாரும்.
ஆனால், ஜனநாயக ஆதரவு கட்சிகள் தங்களுடைய வெட்டு அதிகாரங்களை தங்க வைத்துக் கொள்கிறது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பது பதிவாகியிருக்கிறது. இந்நிலையில் முடிவுகளை அறிவிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் கவனங்களை தூண்டியுள்ளது.
Related posts:
|
|