சீன ஆலயங்களை எரியூட்டிய முஸ்லிம் குழு!

Saturday, July 30th, 2016

இந்தோனேஷியாவில் சிறுபான்மையின மக்களான சீனர்கள் பயன்படுத்தி வந்த 6 கோயில்களை முஸ்லிம் குழு ஒன்று எரியூட்டிய சம்பவத்தை தொடர்ந்து போலிசார் 7 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

சுமத்ரா தீவில், தன் வீட்டுக்கு அருகே இருந்த மசூதியிலிருந்து அதிக சத்தம் வருவதாக சீன பெண் ஒருவர் போலிசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, புத்த மற்றும் கன்ஃபூசியர்களின் கோயில்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பான்மையான நாடு இந்தோனீஷியா. ஆனால், பெருமளவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது சில நேரங்களில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில், இன வன்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

Related posts: