சீனா – பிரேசிலுக்கிடையிலான உறவில் முன்னேற்றம்!

Sunday, September 3rd, 2017

சீனா மற்றும் பிரேசிலுக்கிடையில் விரிவான மூலோபாய கூட்டுறவை மேம்படுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெனியாகியுள்ளன..

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரேசில் ஜனாதிபதி மைக்கல் தேமர் சீன தலைநகர் பீஜிங்கிற்கு விஜயத்தினை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில், இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.இந்த சந்திப்பின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பிரேசில் ஜனாதிபதி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் பிரிக்ஸ் மாநாடு சர்வதேச அரங்கில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: