சீனா, ஈரானை இணைத்து தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பை அமைக்க பாக். திட்டம்!

Thursday, October 13th, 2016

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை, பாதுகாப்புக் காரணத்தினால் சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பொன்றை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை, பாதுகாப்புக் காரணத்தினால் இந்தியா புறக்கணித்தது.இந்தியாவிற்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் போன்ற நாடுகளும் சார்க் மாநாட்டைப் புறக்கணித்தன.இதனால், மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

இந்நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில், தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் இதில், சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய குடியரசு நாடுகள் பாகிஸ்தானுடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்காசிய கூட்டமைப்பு ஏற்கனவே உருவாகிவிட்டதாகவும் சீனா, ஈரான், மத்திய ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தானின் பாராளுமன்ற உறுப்பினர் முஜாகீத் ஹுசைன் நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் – சீனா இடையே உருவாக்கப்படும் பொருளாதார வழித்தடம் தெற்காசியாவையும், மத்திய ஆசியாவையும் பொருளாதார ரீதியாக இணைக்கும் பாலமாக செயற்படும் எனவும் இத்திட்டத்தில் இந்தியாவும் இணைய வேண்டும் என தாம் விரும்புவதாகவும் முஜாகீத் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

57fda7b3a4b68

Related posts: