சீனாவை தாக்கிய காற்று மாசுபாடு!
Friday, December 2nd, 2016
சீனாவில் காற்று மாசுபாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், கார்களை இயக்க தடை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவது என பல்வேறு நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சீனா தலைநகர் பீஜிங்கில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சீனாவின் நான்கு படிநிலை வானிலை எச்சரிக்கை அமைப்பில் ஆரஞ்சு என்பது இரண்டாவது பெரிய எச்சரிக்கை குறியீடு ஆகும். ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கட்டுமான பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அதிக அளவில் வெளியே நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பீஜிங் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நகரில் சூழ்ந்துள்ள புகை மூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலைக்குள் கலைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|