சீனாவைில் கைதான கனேடிய தம்பதிகள் விடுதலை!

Saturday, September 17th, 2016

சீனாவை உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனேடிய தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவை உளவுபார்த்தமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களை திருட முனைந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கெவின் காரட் மற்றும் ஜுலியா காரட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த தம்பதியினர் வடகொரிய எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் அகதிகளுக்கு உதவி செய்வதற்காக வந்த தன்னார்வ தொண்டு ஊழியர்கள் என்ற பெயரில் தங்கியிருந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடே மேற்கொண்ட சீன விஜயத்தை தொடர்ந்து குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சீன பிரதமர் லீ கெக்கியாங் சிறையில் குறித்த இருவரும் துன்புறுத்தப்படவில்லை எனவும் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட்டனர் எனவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

download

Related posts: