சீனாவுடன் பேச்சுவார்த்தை – ட்ரம்ப்!

Friday, November 10th, 2017

ஆசியாவுக்கான தமது நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், சீனாவுககும் பயணம் செய்துள்ளார். இதன்போது, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கால் டொனால்ட் ட்ரம்புக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையிலேயே வடகொரியாவின் செயற்பாடுகளால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக தென்கொரியாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் மிக் ஜொன் உன்னை கடுமையாக எச்சரித்துள்ளார்

தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று, தங்களை சோதிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: