சீனாவில் 27 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு – சீன வெளிவிவகார அமைச்சு !

பெப்ரவரி 10 ஆம் திகதி நிலவரப்படி, சீனாவில் 27 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அந் நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி பெப்ரவரி 06 ஆம் திகதி அமெரிக்க பிரஜையொருவரும், 08 ஆம் திகதி ஜப்பானிய பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களில் மூவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வுஹான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்போது 28 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் தொகை 1013 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோரின் தொகையும் அங்கு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
Related posts:
அலட்சியப்போக்கினாலேயே ரஷ்யாவில் தீ விபத்து - விளாடிமீர் புடின்!
இலங்கையில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்!
ஊழியர் சேமலாப நிதிய மிகுதியை SMS இல் பெற்றுக் கொள்ள முடியும் - தொழில் திணைக்கள ஆணையாளர் ஏ. விமலவீர த...
|
|