சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை – அறிவித்தது சீன அரசு!

சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டது. அதில் ஒன்றான லைஷென்சன் மருத்துவமனை தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி சில நோயாளிகள் வீடு திரும்பியதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட அந்த தற்காலிக மருத்துவமனை தற்போதைக்கு இடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்கா – வடகொரியாவுக்கு சீனா எச்சரிக்கை!
கொரோனா தாண்டவம்: அமெரிக்காவில் பாரிய நெருக்கடி - இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி!
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு...
|
|