சீனாவில் மசாஜ் நிலையத்தில் தீ : 18 பேர் பலி!

Tuesday, February 7th, 2017

சீனாவில் மசாஜ் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சீஜியாங் மாகாணத்தின் தைவூ நகரில் உள்ள மசாஜ் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் பற்றிய தீயானது அடுக்குமாடிக் கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மாடிகளில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாகக் குதித்து உயிர் தப்பினர்.

கார்கள், இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. காற்றின் வேகத்தால் பரவிய தீயின் உக்கிரத்தில் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறியுள்ளன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

fire-zhejiang-massage-parlor-71

Related posts: