சீனாவில் நிலநடுக்கம் !

Monday, March 27th, 2017

தென் மேற்கு  சீனாவின் யாங்பி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.1 அலகாக பதிவாகியுள்ளது.

இதனால் பல கிராமங்களில் வீடுகள், மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர்  3 முதல் 4.7 ரிக்டர் அளவில் 4 தடவை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்பட வில்லை.

Related posts: