சீனாவில் ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு!

Sunday, September 4th, 2016

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்காக சீனாவின் ஹாங்சௌ நகரில் குழுமியுள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் முக்கியமானதாக இருக்கும். நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதில் ஏற்படும் மந்தமான போக்கு சிறிய நாடுகளை அச்சுறுத்துவதாக அமையும் என்று ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் எச்சரித்துள்ளார்.

இந்த உச்சி மாநாட்டை முன்னிட்டு பருவகால மாற்றம் பற்றிய பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள அமெரிக்காவையும், சீனாவையும் பாராட்டிய அவர், ஜி 20 நாடுகள் இந்த நாடுகளின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

160903111428_barack_obama_xi_jinping_640x360_ap_nocredit

தொடக்க நாளின் பெரும் பகுதியின்போது இருதரப்பு சந்திப்பு தொடர்கள் நடைபெறுகின்றன. இந்த உச்சி மாநாடு சிறப்பாக, எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்கு சீனா அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஹாங்சௌ நகரிலுள்ள பெரும்பாலோர் வெளியேறியுள்ளனர். விடுமுறை உறுதிச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மாசு வெளியேற்ற அளவை குறைக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான இரும்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

160904043818_cn_g20_obama_theresa_may_976x549_reuters

இந்த கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்கும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்த பிறகு தன்னுடைய நாடு கடினமாக நிலையை சந்தித்தது என்று தெரிவித்திருக்கிறார்.