சீனாவில் சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் வெடிவிபத்து ஏற்பட்டதில், அதனை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
Related posts:
நியூஜெர்ஸியில் குண்டு வைத்ததாக அஹமது கான் மீது வழக்குப் பதிவு!
வெனிசுலா நாட்டிலும் ரூபாய் தாள் தடை!
சவால்களை எதிர்கொள்வதற்கு இந்திய படையினர் வலுவானவர்களே: அருண் ஜெட்லி!
|
|