சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 12 பேர் உயிரிழப்பு!

Tuesday, June 18th, 2019

சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் 5.9 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.2 ரிச்டர்ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் உடைந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 122 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: