சீனாவில் களை கட்டிய சர்வதேச உலங்கு வானூர்தி கண்காட்சி!

Saturday, September 16th, 2017

சீனாவின் ரைன்ஜின் மாநிலத்தில் 4ஆவது சீன சர்வதேச உலங்குவானூர்தி கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பபமாகியுள்ள குறித்த கண்காட்சியை சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வானூர்தி பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கண்காட்சியில், இராணுவ பயன்பாட்டுக்கான Z-19 மற்றும் Z-11WB உலங்குவானூர்திகள் தங்கள் சாகசங்களைக் காட்டியிருந்தன. அத்துடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான AC313 மற்றும் AC 311 உலங்குவானூர்திகளும் தங்கள் செயல்திறன்களை குறித்த கண்காட்சியில் வெளிப்படுத்தியிருந்தன.இதேவேளை, AC 313 ரக வானூர்தியானது தீயணைப்புத் துறையில் தனது பயன்பாடுகளை செய்து காட்டியிருந்தது.

இந்த கண்காட்சியில் 22 நாடுகள் ளைச் சேர்ந்த சுமார் 403 கண்காட்சியாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.எதிர்வரும் நான்கு நாட்கள் இடம்பெறும் இக்கண்காட்சியில் பல்வேறு விதமான உலங்குவானூர்திகள் வானில் சாகசங்களைக் வெளிக்காட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: