சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும்  ட்ரம்ப்!

Wednesday, October 25th, 2017

வடகொரியா தொடர்பில் ஐ. நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுலாக்க சீனாவை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.இதன்போது இதற்கான அழுத்தத்தை அவர் வழங்குவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வடகொரியாவை மேலும்தனிமைப்படுத்துவதே டொனால்ட் ட்ரம்பின் இலக்காகும். இதற்காக அவர் சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் மற்றும் ஃபிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் போது வடகொரியா தொடர்பில் முக்கிய அவதானத்தை செலுத்தவுள்ளார்.எதிர்வரும் நொவம்பர் மாதம் 3ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது

Related posts: