சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் ஹொங்கொங்கில் பயற்சி!

Thursday, July 13th, 2017

ஹொங்கொங்கிற்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் அங்கு விமான பயிற்சியிலும் ஈடுபட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஹொங்கொங் கடல் எல்லைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த லியோனிங் கப்பலை ஹொங்கொங் மக்கள் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றதுடன் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

ஹொங்கொங் கடற்பரப்பில் நங்கூரமிட்டுத் தங்கியுள்ள கப்பல் போர் விமானங்களை வெற்றிகரமாக ஓடுதளத்தில் இறக்கியும்இ பறக்கவிட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது ஜே 15 ரக போர் விமானங்கள் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பறக்கும் சுறாக்கள் என பெயரிடப்பட்டுள்ள குறித்த போர் விமானங்கள் எதிரியின் தளங்களை இலகுவாக தாக்கும் வல்லமையுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: