சீனாவின் தலையீட்டை எதிர்த்து ஹொங்கொங்கில் பேரணி!

Monday, November 7th, 2016

ஹொங்கொங்கின் அரசியல் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாட்டை எதிர்த்து அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

உள்ளூர் நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்ட இரண்டு ஹாங்காங் உறுப்பினர்கள், பதவியேற்க அனுமதிப்பது தொடர்பில், சீன அரசு ஆணையிடுவதை ஹொங்கொங் மக்கள் விரும்பவில்லை.

சீனாவிடம் இருந்து ஹொங்கொங் பிரிந்து, தனி சுதந்திர நாடாக வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் இவர்கள் இருவரும், சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சினம் கொண்டுள்ள சீனா, திங்கட்கிழமைக்குள் அவர்களின் நிலை பற்றி முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது.

_92296592_6ed83e74-1ada-4a01-b68a-692b60355a7f

Related posts: