சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா 100 டாங்கிகளை நிறுத்தியதால் பதற்றம்!

Wednesday, July 20th, 2016

சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா 100 டாங்கிகளை லடாக் சிகரத்தின் கிழக்கு பகுதியில் நிறுத்தியதால் எல்லை பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரின் லடாக் சிகரத்தின் கிழக்கு பகுதி மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் கடந்த 1962ம் ஆண்டு இருநாட்டிற்கும் இடையே போர் மூண்டது. போருக்கு பின் எல்லையில் பதற்றம் சற்று தணிந்தது.

அதனை தொடர்ந்து சீன ராணுவன் அவ்வ போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் தொடுப்பதும் இருந்தது வந்தது.அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை சீனா தனது பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி சீன ராணுவம் ஊடுருவுகிறது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சங்கர் திக்ரி’ என்னும் இடத்தில் கடந்த வாரம் 9–ந்தேதி நமது படை வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நமது ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்ததால் சீன படையினரின் நோக்கம் நிறைவேறவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர்கள் பின்வாங்கினர்.

இந்நிலையில் லடாக் பகுதியில் சீனா அடிக்கடி அத்துமீறுவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் அதிநவீன டி72 ரக 100 ராணுவ டாங்கிகளை சீன எல்லையில் இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் இந்திய, சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

Related posts: