சிலியில் சாலை விபத்து – 09 பேர் பலி!

Friday, January 11th, 2019

சிலியில் சாலை விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.