சிறையில் துப்பாக்கிச்சூடு: எத்தியோப்பியாவில் 20 பேர் பலி!

Monday, September 5th, 2016

கடந்த சனிக்கிழையன்று, எத்தியோப்பியா தலைநகர் அட்டிஸ் அபாபா அருகே உள்ள அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை தீப்பிடித்த நிலையில், தற்போது அங்கு கடும் துப்பாக்கித் தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் கிலின்டோ சிறையில் சுமார் 20 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க நினைத்த கைதிகளால் முதலில் தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அத்தகவலை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

எத்தியோப்பியாவில் உள்ள சில பெரிய இனக்குழுக்களால் நாட்டின் பல பகுதிகளில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

160224114711_ethiopia_map_512x288__nocredit

Related posts: