சிறைக்கு செல்ல தான் அஞ்சியதில்லை – தென் ஆபிரிக்க அதிபர்!

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள தென் ஆபிரிக்க அதிபர் ஜேகப் ஸூமா, சிறைக்கு செல்வதற்காக தான் ஒரு போதும் அஞ்சியதில்லை என்றும், காரணம் இனவெறியை எதிர்க்கும் ஆர்வலராக இருந்த போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்ததாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பணக்கார இந்திய வர்த்தகர்களுடனான சில ஒப்பந்தங்களில் ஜேகப் ஸூமா மற்றும் மூத்த அரசாங்க பிரபலங்கள் முறையின்றி செயல்பட்டார்களா என்பது குறித்த ஒரு நீதித்துறை விசாரணையை ஊழல் தடுப்பு அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்ததை தொடர்ந்து அவரிடமிருந்து வரும் முதல் பொதுவான கருத்து இதுவாகும்.
நட்டல் மாகாணத்தில் உள்ள குவா ஸூலுவில் ஆயிரக்கணக்கான உற்சாக ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய ஸூமா, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஜனநாயக விவாதங்களை வெளியே தள்ளுவதாக குற்றஞ் சாட்டினார்.
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை அதிபர் ஸூமா எதிர்கொள்ள உள்ளார்.
இந்த ஆண்டில் ஏற்கனவே நடைபெற்ற இரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்களில் அவர் பதவி தப்பியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|