சிறுவனின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Friday, May 13th, 2016
மெக்சிகோவில் மாயன் காலத்து நகரை 15 வயது சிறுவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான். கி.மு. 1800 ஆண்டிலிருந்து கி.பி. 900ஆம்ஆண்டு வரை மாயன் காலத்து மக்கள் சிறப்பாக வாழ்ந்ததாக சரித்திரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக கட்டிடகலையில் சிறந்து விளங்கியவர்கள், நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான பழங்குடியின மக்களை அழித்து விட்டே வெள்ளைக்காரர்கள் குடியேறினர்.

இவர்களின் வாழ்விடங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காட்டுபகுதியில் மாயன் காலத்து நகரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் 80 மீட்டர் உயரம் கொண்டஒரு பிரமீடு, 30–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்இருக்கின்றன. இதை கனடாவின் கியூபெக் நகரை சேர்ந்த 15வயது சிறுவனான வில்லியம் காதுரி கண்டுபிடித்துள்ளான்.

கூகுள் உலக புகைப்படம் மற்றும் கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்தே இந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளான்.

Related posts: