சிரிய விமான நிலைய தாக்குதலின் எதிரொலி: ரஷ்யாவுக்கான பயணத்தை இரத்து செய்தார் போரிஸ் ஜோன்சன்!

Monday, April 10th, 2017

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை பிரித்தானிய வெளியுறவுச் செயலர் பொரிஸ் ஜோன்ஸன், இரத்து செய்துள்ளார். சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் வெளியிட்டிருந்த நிலையில்,போரிஸ் ஜோன்சன் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொரிஸ் ஜோன்ஸன் தனது பயணத்தை இரத்து செய்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “சிரியாவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அங்குள்ள நிலைமையை அடிப்படையில் மாற்றியுள்ளதாகவும், போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேச ஆதரவை உருவாக்குவதே தன்னுடைய நோக்கம் எனவும் சிரியாவில் அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்க தேவையான அனைத்தையும் செய்ய ரஷ்யாவிடம் பிரித்தானியா கேட்டுகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா வழங்கி வருகின்ற பாதுகாப்பை நினைத்து தாம் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: