சிரிய குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழப்பு!

Thursday, February 22nd, 2018

போராளிகளது கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் கிழக்கு கோட்டா பிரதேசத்தில் அந்த நாட்டின் அரச படையினர் பலத்த குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சிரியாவின் டமாஸ்கஸ் பிராந்தியத்துக்கு அப்பால் உள்ள கோட்டா பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 98 பொதுமக்கள்பலியாகியுள்ளதுடன் அவர்களில் 20 பேர் சிறார்கள் என்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அறிவித்துள்ளனர். மேலும் 470 பேர் வரையில்காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியின் நிலைமை தற்போது மோசமாக மாறி இருப்பதாகவும் குண்டுத் தாக்குதல்களை படையினர் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா அதிகாரிகள்வலியுறுத்தியுள்ளனர்.

Related posts: