சிரிய இராணுவத்திற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை தவிர்த்தது ரஷ்யா!

Saturday, February 11th, 2017

சிரியா இராணுவத்திற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளது.

வட சிரியாவில் சிரிய அரசாங்க இராணுவப் படையினரும், துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சிப் படையினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு தரப்பினரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதலை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளது. அரச படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தாம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ரஷ்ய தலையீடு காரணமாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது;

army

Related posts: