சிரியாவில் மீண்டும் இரசாயன தாக்குல்!

download (3) Tuesday, March 13th, 2018

சிரிய துருப்பினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே, பாரிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிரியாவின் கிழக்கு குவோட்டா நகரத்தில் கடந்த 21 நாட்களாக இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஆயிரத்து 99 பொதுமக்கள் இதுவரையில் பலியாகியுள்ளதாக, பிரித்தானியாவில் நிலைக் கொண்டுள்ள மனித உரிமை பணியகம் தெரிவித்துள்ளது.

மரணித்தவர்களில் 227 சிறார்களும் 154 பெண்களும் உள்ளடங்குவதாக அந்த அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர குறைந்தது 4 ஆயிரத்து 378 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்படைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதியற்ற நிலையில், பெரும் துன்பத்தை எதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தலைநகர் டமஸ்கசை ஒட்டிய கிழக்கு குவோட்டவில் நேற்று இரவு இரசாயனத்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரசாயன தாக்குதலுக்காக குலோரின் வாயு, பொஸ்பரஸ் மற்றும் நேபாம் இரசாயணங்களும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.