சிரியாவில் மனித வெடிக்குண்டு தாக்குதல்: 30 பேர் பலி!

Tuesday, October 4th, 2016

சிரியாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு சிரியாவில் உள்ள Hasaka என்ற நகரில் அமைந்துள்ள மண்டபத்தில் குர்து இனத்தை சேர்ந்தவர்களின் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்று மாலை நடந்துள்ளது.

அப்போது, கூட்டத்தினருக்கு மத்தியில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் உடல்கள் சிதறியுள்ளன.இச்சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 90 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால், தற்போது இந்த பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு பெண் மனித வெடிகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தகவலள் வெளியாகியுள்ளன.எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக, காலை நேரத்தில் Hama என்ற நகரில் தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160

Related posts: