சிரியாவில் புதிய பாதுகாப்பு வலயம்: ரஷ்யா

சிரியாவின் ஹோம்ஸ் நகர வடக்கில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் நெருக்கடிநிலை குறைந்த வலயம் ஒன்றை உருவாக்க ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிரிய எதிர்தரப்புக்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில், இன்று (வியாழக்கிழமை) ரஷ்ய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷ்கோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த பகுதியில் போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பாதுகாப்பு வலயமானது ஒருலட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 84 குடியேற்றங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும...
மெகுனு புயல் தாக்கம் : ஓமானில் 11 பேர் பலி!
தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!
|
|