சிரியாவில் தற்கொலை தாக்குதல்!

Monday, July 3rd, 2017

சிரிய தலைநகர் டமஸ்கஸ்சில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக உள்ளுர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது மேலும் 12 பேர் வரை படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தற்கொலை குண்டு தாரிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று சிற்றூர்ந்துகளில் பயணித்தவர்களை சிரிய காவல்துறையினர் பின்தொடர்ந்த வேளையில், ஒரு சிற்றூர்ந்தில் உள்ள தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

முஸ்லீம்களின் புனித மாதமான ரமழானின் பின்னரான முதலாவது அலுவலக நாளில், தற்கொலை குண்டு தாக்குதலை சன நெரிசல் மிக்க பிரதேசங்களில் தாக்க திட்டமிட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் குறித்து இதுவரை எந்த குழுவினரும் உரிமை கோரவில்லை.சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇந்த யுத்தம் காரணமாக 55 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், 63 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.