சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் –  220 பேர் பலி!

Thursday, July 26th, 2018

சிரியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் 220க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சிரியாவின் ஸ்விடா மாகாணத்தின் தெற்கு பகுதியில், நேற்று 3 பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 38 பேர் பலியாகினர். இந்நிலையில், ஸ்விடாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதலில் 221 பேர் பலியாகினர். இதில் 127 பேர் அப்பாவி பொதுமக்கள் என சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.