சிரியாவில் ஒரு மில்லியன் பேர் முற்றுகையில் சிக்கி தவிப்பு!

Wednesday, November 23rd, 2016

முற்றுகையில் வாழும் சிரிய மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இரட்டிப்பாகி சுமார் ஒரு மில்லியனை எட்டி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

ஆறு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 486,700இல் இருந்து 974,080 ஆக உயர்ந்திருப்பதாக அவசர உதவிகளுக்கான இணைப்பாளர் ஸ்டீபன் ஓபிரைன் குறிப்பிட்டுள்ளார். “தனிமைப்படுத்தப்பட்டு, பட்டினி, குண்டுகள், மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் இன்றி வெளியேறுவது தடுக்கப்பட்ட நிலையில்” மக்கள் இருந்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் அரச படைகளே பெரும்பாலான கொடூரமான செயலில் ஈடுபடுவதாக ஓபிரைன் குறிப்பிட்டார்.

ஐ.நா பாதுகாப்புச் சபை முன் உரையாற்றிய அவர் மேலும் கூறும்போது, “பாதுகாப்பு சபையால் தற்போது எதுவும் செய்ய முடியாது அல்லது தடுக்க முடியாது என்பது இந்த முற்றுகையை மேற்கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கிறது” என்றார்.

புதிதாக முற்றுகையில் சிக்கியிருக்கும் பகுதிகளில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு டமஸ்கஸ் புறநகரங்களான ஜொபர், ஹஜர் அல் அஸ்வத் மற்றும் கான் அல் ஷிஹ்ஹுடன், தலைநகருக்கு அப்பால் கிழக்கு கூத்தா விவசாய பிரதேசங்களும் அடங்கும்.இதில் உக்கிர மோதல் இடம்பெற்று வரும் அலெப்போவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு பகுதியில் சுமார் 275,000 மக்கள் முற்றுகையில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: