சிரியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்?

Wednesday, February 8th, 2017

சிரியாவில் உள்ள  Saydnaya சிறையில், சுமார் 13000 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த 13,000 பேரில் பெருமளவானோர் சிரிய எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் எனவும், அவர்கள் இரகசியமான முறையில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு சிரியாவில் உள்ள உயர் அதிகாரிகளும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.சிரியாவில் வழங்கப்படும் மரண தண்டனை தொடர்பல் கருத்து தெரிவித்த மனித உரிமைகள் குழுவொன்று, குறித்த மரண தண்டனை கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து விதிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவை செப்டம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் அதிகளவில் நிறைவேற்றப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் கொலை  செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் சிரிய அரசாங்கத்தின் மீது முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டடிருந்த போது, குறித்த குற்றச்சாட்டை சிரிய அரசாங்கம் முற்றாக மறுத்திருந்தது.

இருப்பினும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னதாக கருத்து தெரிவித் ஐ.நாவின் மனித உரிமை தொடர்பான நிபுணர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான கைதிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் என்பன உண்டு என தெரிவித்துள்ளனர்.

1424481683-dubai_fire13

Related posts: