சிரியாவிலுள்ள இலங்கை ஐ.எஸ். குறித்து இந்தியா தகவல்!

Wednesday, July 19th, 2017

ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து இஸ்லாமிய இராஜ்ஜியத்துக்காக போராடும் நான்கு இலங்கையர்கள் சிரியாவில் இருப்பதாகவும், அவர்களுடன் இலங்கையிலுள்ள 70 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் இந்திய புலனாய்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிக்கு ஆதரவு வழங்கிய இலங்கையரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது. கடந்த காலத்தில் ஐ.எஸ். உடன் இணைந்துகொள்வதற்காக ஆறுபேர் இலங்கையிலிருந்து சிரியா சென்றுள்ளதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளாராம். அபுதுஜான் தஜுதீன், நிலாம், இஸான், நிலாம், நஸ்தீர் தாஜுதீன், ரோஸ் மற்றும் அமீன் ஆகிய பெயர்களையுடையவர்களே இவர்கள் எனவும் குறித்த சந்தேகநபர் தகவல் வழங்கியுள்ளார்.

இந்த ஆறு பேருடன் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சுமார் 70 பேர் சிரியாவுக்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் இந்திய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளதாக இலங்கையின் இன்றைய தேசிய சகோதர நாளிதழொன்று அறிவித்துள்ளது. இலங்கையில் ஐ.எஸ். இருப்பதாக பல வதந்திகள் பரப்பப்பட்டு அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் மற்றுமொரு முயற்சியாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: