சிரியாவின் இட்லிப், அலெப்போ நகரங்களில் விமானத் தாக்குதல்கள்: 100க்கும் அதிகமானோர் பலி!

Sunday, September 11th, 2016

நடைமுறைக்கு வரவுள்ள போர்நிறுத்தத்திற்கு முன்னராக, போரிடும் தரப்பினர் தமது நிலைகளை பலப்படுத்திகொள்ள சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ நகரங்கள்மீது  நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 100க்கும் ஆதிகமானோர் பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து எழுகின்ற புகை மேகங்களையும், இடிபாடுகள் நிறைந்திருக்கும் தெருக்களில் காயமுற்றோரை மக்கள் தூக்கி செல்வதையும் இட்லிப் நகரில் எடுக்கப்பட்ட காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

ரஷியாவும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ள போர்நிறுத்தம் திங்கள்கிழமை முதல் அமலாகும். ஜெனிவாவில் எட்டப்பட்ட இந்த போர்நிறுத்த உடன்படிக்கையை சிரியா அரசும், முக்கிய எதிரணி பேச்சுவார்த்தை குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த போர் நிறுத்தம் நடைமுறையாகி குறைந்தது ஒரு வாரம் நீடித்தால், அமெரிக்காவும், ரஷியாவும் இஸ்லாமியவாத தீவிரவாதிகளுக்கு எதிராக விமானத் தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்த துவங்கும்.

160910155329_aleppo_640x360_afp_nocredit

160910114834_aleppo_640x360_reuters_nocredit

160909133729_aleppo_640x360_afp_nocredit

Related posts: