சிரியவை நோக்கி சென்றுகொண்டிருந்த பல எண்ணெய்கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது – வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் சிரியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பல கப்பல்களின் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது என அமெரிக்காவின் வோல் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் பிராந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டியே வோல்ஸ்ரீட் ஜேர்னல் இதனை தெரிவித்துள்ளது.

செங்கடலில் கடல்கண்ணிவெடிகளை பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது பிராந்தியத்தின்; ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான தாக்குதல் இடம்பெற்றுள்ளது என வோர்ல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து எண்ணெயை கொண்டு சென்ற கப்பல்களையே இஸ்ரேல் இலக்குவைத்துள்ளது.

ஈரான் ஆயுதங்களை நகர்த்துவதை இலக்காக கொண்டே சில தாக்குதல்கள் இடம்பெற்றன என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

பெட்ரோலில் இருந்து கிடைக்கும் வருமானம் பிராந்தியத்தில் தீவிரவாதத்திற்கு நிதி கிடைப்பதற்கு காரணமாகஉள்ளது என்ற அடிப்படையில் எண்ணெய் கப்பல்களை இஸ்ரேல் இலக்குவைத்துள்ளது.

இதன் காரணமாக எண்ணணெய் கப்பல்கள் எவையும் மூழ்கவில்லை ஆனால் இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஈரான் துறைமுகத்தி;ற்கு திரும்பவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

Related posts: