சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

Friday, August 9th, 2019

கனடாவில் ஒன்ராறியோ ஏரி அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 46 வயதான மெலனி வச்சன் என்பவர் மாயமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் டர்ஹாம் பிராந்திய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டதன் ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்ராறியோ ஏரி அருகே இருந்து பெண்ணின் சடலம் ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் புதனன்று 44 வயதான ஜெஃப்ரி வெல்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டெடுக்கப்பட்ட சடலம் மாயமான மெலனி வச்சன் என்பவரது என உறுதியான நிலையில்,

வெல்டன் தொடர்பில் பொலிசார் விசாரித்துள்ளனர். இதில் இருவரும் காதலித்து வந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பில் வெல்டன் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: