சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி !

தமிழர்கள் கொண்டாடும் திருநாட்களை வெளிநாட்டவர் விரும்பி கொண்டாடுவது போல் இந்த வருடம் சிங்கப்பூரில் தீபாவளித்திருநாள் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
சிங்கப்பூரில் முதன்முறையாக தீபாவளி ஸ்பெஷல் தீம் ரயிலை கடந்த 15ம் திகதி அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் ஆரம்பித்து வைத்து பயணம் மேற்கொண்டார்.
சிங்கப்பூர் நாட்டில் தழிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற தீபாவளி திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்காக தீம் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள மின்சார ரயில் ஒன்றினை தாமரை மயில் ஆபரணங்கள் கோலங்கள் பட்டாசுகளின் படங்கள் உள்ளிட்டவற்றுடன் வடிவமைத்துள்ளனர். வீதியோரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈராக்கிற்கான தடை நீங்கியது அமெரிக்கா!
ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்து!
நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு !
|
|