சிகிச்சைக்கு கணவன் மறுப்பு – தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்!

Saturday, September 9th, 2017

அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தையைப் பிரசவிக்க கணவன்  இணங்காததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

இந்தச் சோகச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் பிரசவத்துக்காக மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண் அதிக வயிற்றுவலியால் துடிக்க மருத்துவர்கள் பெண்ணின் வயிறிலுள்ள குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தனர். குழந்தையின் தலை பெரிதாக இருந்ததால் சுக பிரசவம் செய்வது ஆபத்தானது அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை பிரசவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்

அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலை நிர்வாகம் குறித்த பெண்ணின் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் கையெழுத்து கேட்ட போது அவர்கள் கையெழுத்திட மறுத்துள்ளனர். தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் சுக பிரசவத்தின் மூலம் குழந்தையை பிரசவித்து தர வேண்டும் என்று கோரியுள்ளார்

அதிக வலியால் துடி துடித்த அந்தப் பெண் தவறான முடிவெடுத்துத் தான் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அறை யன்னலினூடாக குதித்து உயிரை மாய்த்துள்ளார். அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: